Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பொதுத்துறை வங்கிகளின் லாபம் அதிகரிக்க வாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளின் லாபம் அதிகரிக்க வாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளின் லாபம் முந்தைய காலாண்டைவிட 19 சதவீதம் அதிகரிக்கலாம்.

பகிரவும் WhatsApp Facebook

2026–27 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் 27 சதவீதமும், தனியார் வங்கிகளின் லாபம் 24 சதவீதமும் அதிகரிக்கலாம் என மோதிலால் ஓஸ்வால் கணித்துள்ளது. அதேநேரம், நிகர வட்டி வருவாய் வளர்ச்சியில் தனியார் வங்கிகள் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், வங்கித் துறையின் செயல்பாடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வணிக வளர்ச்சி, வெளிநாட்டு நாணய வைப்புகள் மற்றும் பங்கு விற்பனை ஆதாயங்கள் வங்கிகளின் லாபத்தை உயர்த்தக்கூடும் என ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் லாபம் முந்தைய காலாண்டைவிட 19 சதவீதம் அதிகரிக்கலாம். எஸ்பிஐயின் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் தேசிய பங்குச்சந்தை பங்குகள் விற்பனை, பாங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி ஆகியவற்றின் தேசிய பங்குச்சந்தை பங்கு விற்பனை ஆதாயங்கள் இதற்கு ஆதரவளிக்கக்கூடும்.

நிகர வட்டி வருவாயைப் பொறுத்தவரை, தனியார் வங்கிகளில் 13 சதவீதமும், பொதுத்துறை வங்கிகளில் 10.8 சதவீதமும் ஆண்டு வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. கடன்கள் மற்றும் முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாயிலிருந்து, வைப்புகள் மற்றும் கடன்களுக்குச் செலுத்தும் வட்டியைக் கழித்தால் கிடைப்பதே நிகர வட்டி வருவாய்.
பெரிய தனியார் வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கியின் நிகர வட்டி வருவாய் 16.8 சதவீதம் உயரலாம். கோட்டக் மகிந்திரா வங்கிக்கு 14 சதவீதம், எச்டிஎஃப்சி வங்கிக்கு 8.9 சதவீதம், ஆக்சிஸ் வங்கிக்கு 8.5 சதவீதம் வளர்ச்சி கணிக்கப்பட்டுள்ளது.

எச்டிஎஃப்சி வங்கியின் வைப்புத் தொகை வளர்ச்சிக்கு வெளிநாட்டு நாணய வைப்புகள் உதவக்கூடும். பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர வட்டி விகிதம் சிறிதளவு மேம்படலாம். யூனியன் வங்கியின் சொத்துத் தரத்தில் முன்னேற்றமும், கடன் செலவில் மிதமான உயர்வும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்சிஸ் வங்கியில் கடன் செலவு சற்றுக் குறையலாம். ஏயூ வங்கியின் லாபம் ஆண்டுக்கு 53.6 சதவீதம் அதிகரிக்கலாம்; அதன் நிகர வட்டி விகிதம் முந்தைய காலாண்டைவிட நான்கு அடிப்படைப் புள்ளிகள் உயரக்கூடும்.

பொதுத்துறை வங்கிகளின் வட்டி விகிதங்கள் நிலைத்தன்மையுடன் இருக்கலாம்; தனியார் வங்கிகளின் வட்டி விகிதங்களில் அழுத்தம் நீடிக்கலாம் என்றும் அறிக்கை கூறுகிறது. வங்கிகளின் தனிப்பட்ட செயல்பாடுகளில் வேறுபாடுகள் இருக்கும் என்பதால், ஒட்டுமொத்தத் துறை வளர்ச்சியுடன் ஒவ்வொரு வங்கியின் வருவாய், லாபம், சொத்துத் தரம் ஆகியவையும் கவனம் பெறுகின்றன. இவை ஆய்வு நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளாகும்; அறிவிக்கப்பட்ட காலாண்டு முடிவுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிஐசிஐ, எஸ்பிஐ, கோட்டக் மகிந்திரா மற்றும் ஏயூ ஆகியவற்றை மோதிலால் ஓஸ்வால் தனது விருப்பத் தேர்வுகளாகக் குறிப்பிட்டுள்ளது.

முந்தைய செய்தி
இரண்டாவது மூலதனச் சந்தை மாநாட்டை மும்பையில் நடத்தியபி பிபிஎஃப்
அடுத்த செய்தி
ரூ.750 கோடி... பூந்தமல்லி டூ வடபழனி! மெட்ரோவில் டக்குன்னு போலாம்! பச்சைக்கொடி காட்டிய பிரதமர் மோடியும் முதல்வர் விஜயும்!

தொடர்புடைய செய்திகள்